இந்த விஷயத்தை புரிஞ்சுக்கவே எனக்கு 10 வருஷம் ஆச்சு… மனம் திறந்த விஜய் சேதுபதி….

By admin on தை 18, 2025

Spread the love

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகராவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக உயரத்தை எட்டியவர் விஜய் சேதுபதி. கூத்து பட்டறையில் கணக்காளராக பணியாற்றி வந்த விஜய் சேதுபதி அங்கேயே நடிப்பையும் கற்றுக் கொண்டார்.

   

பிறகு பல முன்னணி கதாநாயகர்கள் திரைப்படத்தில் ஹீரோக்களுக்கு பின்னணியில் கூட்டத்தில் நடித்திருப்பார் விஜய் சேதுபதி. 2019 ஆம் ஆண்டு “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அதை தொடர்ந்து வயதானவர் நடுத்தர வயது வில்லன் என தனக்கு கிடைத்த வாய்ப்பு எல்லாம் பயன்படுத்தி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் விஜய் சேதுபதி.

   

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் வசூல் சாதனை படைத்து நல்ல விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி தன்னை மாற்றிய ஒரு விஷயத்தைப் பற்றி கூறியிருக்கிறார்.

 

அவர் கூறியது என்னவென்றால் நானும் ரவுடிதான் படம் முடித்துடன் விக்னேஷ் சிவன் வந்து நீங்க நல்ல ஆக்டர் தெரியும் ஆனா இந்த படத்தின் மூலமா நீங்க நல்ல Performer னு தெரியும் அப்படின்னு சொன்னாரு எனக்கு அப்போ புரியல அதுக்கப்புறம் தான் கொஞ்சம் வருஷம் கழிச்சு மக்களுக்காக நீங்க ஒரு படம் பண்ணுங்க அப்படின்னு ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் என்கிட்ட சொல்லும் போது தான் நம்ம நடிக்கிறோம் மக்களுக்கு பிடிக்குது நல்ல ஓடுது அப்படின்னு தான் நான் நினைச்சுகிட்டு இருந்தேன்.

அதுக்கப்புறம் உட்கார்ந்து யோசிக்கும் போது எனக்கு புரிஞ்சுது மக்களோட பார்வையில அவங்களுக்கு எது பிடிக்குதோ அவங்க மனச தொடுற மாதிரி ஒரு நல்ல Performace காட்டுற படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கணும் அப்படிங்கறது எனக்கு புரிஞ்சுது. இந்த ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கவே எனக்கு 10 வருஷம் ஆச்சு என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் விஜய் சேதுபதி.