அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும், தொழிலதிபருமான சங்கர் என்பவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சங்கரின் வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 4 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜி தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்கள் குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் பலமுறை சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அவரது நெருங்கிய நண்பரின் இடங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…
தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பதும், அதுகுறித்த விவாதங்கள் எழுவதும் காலம் காலமாக தொடரும் ஒரு வழக்கமான…
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று…
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திராவிட…