கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் வந்த ஜோஸ்வா இமைப் போல் காக்க படத்திற்கே இப்படி ஒரு நலமைனா துருவ நட்சத்திரம் என்னாகப் போகுது தெரியலையே. 2000 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த கௌதம் வாசுதேவன் மேனன் அவர் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, நீதானே என் பொன்வசந்தம், விண்ணைத்தாண்டி வருவாயா பல வெற்றி படங்கள் இதில் அடங்கும்.
தற்போது திரையரங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு விண்ணைத்தாண்டி வருவாயோ, வாரணம் ஆயிரம் பல மாதங்களாக வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான பொழுது கூட இவ்வளவு நாள் ஓடவில்லை, தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா 750 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வாரணம் ஆயிரம் படத்திற்கு சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் டிக்கெட் கிடைக்காத அளவிற்கு ஹவுஸ் உள்ளாக இருக்கிறது.
ஆனால் அதே சமயத்தில் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னாடி தயாரிக்கப்பட்டு தற்போது இரண்டு நாட்கள் முன்னால் வெளியான ஜோஸ்வா இமைப்போல் காக்க படம் பாடு படுதோல்வி அடைந்து, ரசிகர்கள் ஒருவர் கூட படத்தை பார்க்க வரவில்லையாம்.? இந்த நிலைமையில் ஆறு வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் “துருவ நட்சத்திரம்” படம் என்னாக ஆகப்போகிறதோ? என்று தெரியவில்லை,
அப்படம் திரைக்கு வருமா என்று சந்தேகம் உள்ளது. அது மீறியும் வந்தால் ஜோஸ்வா இமைப்போல் காக்க படம் போல் மொக்கையாக மண்ணை கவிவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி நடக்காமல் விக்ரம் நடிப்பில் வரும் துருவ நட்சத்திரமும் படம் வெளியாகி நல்லபடியாக ஓட வேண்டும் என்று பல ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
