உங்கள் வீட்டில் Car Parking வசதி இருக்கிறதா…? அப்படி இல்லையென்றால் கார் வாங்கவே முடியாது… அமலுக்கு வந்த புதிய சட்டம்…

By admin on தை 12, 2025

Spread the love

முந்தைய காலகட்டத்தில் பணக்காரர்கள் வீட்டில் மட்டும் தான் கார் இருந்தது. ஆனால் இப்போதோ அனைவர் வீடுகளிலும் கார் இன்றியமையாததாகிவிட்டது. அப்படி இல்லை என்றாலும் லோன் போட்டாவது ஒரு கார் வாங்கி விட வேண்டும் என்பது பலரின் மனநிலையாக இருக்கிறது. இந்த காரணத்தால் இந்தியா முழுவதும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு, நகரமயமாக்குதல் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது இதனாலும் பல பிரச்சனைகள் உருவாகிறது.

   

அனைவர் வீடுகளும் கார் வந்ததால் நெரிசல், காற்று மாசுபடுதல் போன்றவைகள் வரக்கூடும். ஆனால் அதையும் தாண்டி புதிய பிரச்சினை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால் கார் வாங்குபவர்கள் முறையாக கார் பார்க்கிங் வசதியோடு யாரும் வாங்குவதில்லை. ஒரு சிலர் வீடுகளிலேயே கார் பார்க்கிங் வசதி இருக்கும். பலர் வீட்டின் முன்னாலே ரோடுகளில் தான் காரை நிறுத்தி வைப்பார்கள். இதனால் பல இடைஞ்சல்களும் நெரிசல்களும் ஏற்படுவதால் மும்பை அரசாங்கம் புதிய ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

   

அது என்னவென்றால் சொந்தமாக கார் வாங்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் முறையாக கார் பார்க்கிங் வைத்திருக்க வேண்டும். உங்களிடம் சரியான வாகன நிறுத்தும் இடம் இருப்பதை உறுதி செய்ய அரசாங்க அதிகாரிகள் வீடுகளுக்கு வந்து நேரடியாக சரி பார்ப்பார்கள். அவர்கள் உறுதிப்படுத்திய பிறகு ஒரு சட்டபூர்வமான வாகன நிறுத்துமிடத்தை வைத்திருப்பதற்கான சான்றிதழை வழங்குவார்கள். புதிய வாகனம் வாங்குவோர் இந்த சான்றிதழையும் இணைத்து முக்கிய ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும் மும்பை அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. இந்த சான்றிதழ் இல்லாமல் புதிய கார் வாங்க முடியாது என்று மும்பை அரசாங்கம் கூறியிருக்கிறது.

 

மும்பை, நாக்பூர் மற்றும் புனே போன்ற முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலம் சாலையில் காரை நிறுத்தி மக்களுக்கு இடைஞ்சல் செய்வது தடுக்கப்படும். புதிய கார் வாங்க செல்வோர் கட்டாயம் இந்த சான்றிதழையும் வாங்கி செல்ல வேண்டும். இது மும்பையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதை செயல்படுத்தலாம் என்று அரசாங்கங்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.