BREAKING: ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உயர்வு?…. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் போது, இந்தத் தொகையை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று முன்னாள் அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரின் இந்த உறுதியான பதிலைத் தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் முக்கிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் மகளிரிடையே பெருமளவில் அதிகரித்துள்ளது.