‘எங்க இருக்கிறோம் என்பது முக்கியமில்லை எப்படி இருக்கிறோம் என்பது தான் முக்கியம்’…. கணவருடன் ரொமான்டிக் புகைப்படத்தை பதிவு செய்த மகாலட்சுமி….

By Begam on கார்த்திகை 1, 2022

Spread the love

மகாலட்சுமி ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் மாறி மாறி தங்கள் காதலை வெளிப்படுத்துவது தான் சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். மகாலட்சுமிக்கு முன்பு அனில் என்பவருடன் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. பின்னர் இருவரும் பிரிந்தனர்.

   

   

மகாலட்சுமியின் முதல் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகாலட்சுமியும் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். ரவீந்திரன் தனது முதல் மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்து வந்தார். இதை தொடர்ந்து மகாலட்சுமி ரவீந்தர் இருவரும் காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

 

 

திருமணம் பரபரப்பாக பேசப்பட்டதை தொடர்ந்து இருவரும் பல்வேறு சேனல்களிலும் பேட்டி அளித்து வந்தனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் அவ்வப்போது தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவது விளக்கம்.

 

சமீபத்தில் கூட அவர்கள் தலை தீபாவளியை கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருந்தனர். அந்த வகையில் தற்போது இருவரும் காருக்குள் இருந்தவாறு ‘எங்கு இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை எப்படி இருக்கிறோம் என்பது தான் முக்கியம்’ என்று கேப்சன் இட்டு கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் மஹாலக்ஷ்மி. இவர்களின் இந்த பதிவு ரசிகர்களால்  வைரலாக்கப்பட்டு வருகிறது.