“உன்னை வீட்ல விட்டுடுறோம் வா” பார்ட்டி முடிந்ததும் காரில் அழைத்து சென்று… நள்ளிரவு 1.30 மணிக்கு ஐடி நிறுவன மேலாளருக்கு நடந்த கொடூரம்…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், தனியார் ஐடி நிறுவன மேலாளராகப் பணியாற்றும் பெண் ஒருவர், ஓடும் காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 20-ம் தேதி, ஷோபாக்புராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் (CEO) பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதிகாலை 1.30 மணி வரை நீடித்த இந்த விருந்தில் மது பரிமாறப்பட்டுள்ளது.

விருந்து முடிந்ததும், நிறுவனத்தின் பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் மற்ற ஊழியர்களை அனுப்பிவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் சிகரெட் போன்ற ஒன்றைப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கியுள்ளனர். அதனைப் பயன்படுத்திய சிறிது நேரத்திலேயே அவர் மயக்கமடைந்துள்ளார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது, காரில் வைத்துத் தலைமை நிர்வாக அதிகாரி தன்னைத் துன்புறுத்தியதாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, உதய்பூர் போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட மொத்தம் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

புதிய டுவிஸ்ட்..! விஜய்யின் மாஸ்டர் பிளான்… திருச்சி கிழக்கில் களமிறங்கும் த்ரிஷா..? பனையூர் சந்திப்பால் பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும்…

1 minute ago

“அன்றே என் மகன் மனதில் அது இருந்தது” விஜய்யின் ரகசிய சபதத்தை போட்டுடைத்த தந்தை எஸ்.ஏ.சி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது…

6 minutes ago

நிஜமான ரசிகர்களின் கணிப்பு..! “தளபதி டூ தமிழக முதல்வர்” ஜனநாயகன் படத்தில் மாறப்போகும் விஜய்யின் பெயர்..?

தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம்…

11 minutes ago

110+ இடங்களில் தவெக முன்னிலை.. மகன் ஜெயிச்ச சந்தோஷத்தில் தாய் ஷோபா சொன்ன அந்த வார்த்தை…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியின்…

15 minutes ago

“தமிழகத்தில் தொங்கு சட்டசபை?.. இப்போது எல்லாமே இவர் கையில்தான்.. ஆளுநர் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’ என்ன?… மிரண்டுபோன அரசியல் கட்சிகள்”…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…

16 minutes ago

“2026 ஜஸ்ட் சாம்பிள் தான்.. மெயின் பிக்சர் 2031-ல இருக்கு… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் ‘குட்டி’ ரசிகர்கள்… விஜய்யின் சைலண்ட் ஸ்கெட்ச்”…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

24 minutes ago