செத்துட்டேன்னு நினைச்சீங்களா..? அமெரிக்கத் தூதருடன் களம் இறங்கிய இஸ்ரேல் பிரதமர்.. அதிரவைக்கும் வீடியோ பின்னணி…!

Spread the love

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தான் கொல்லப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரானின் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும், சமீபத்திய காட்சிகளில் தெரிவது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட உருவம் என்றும் பரவிய தகவல்களைத் தொடர்ந்து இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து காபி குடித்தபடி நேதன்யாகு பேசிய வீடியோ வைரலானது. அதில் அவர் நகைச்சுவையாக, “நான் காபிக்காகத்தான் ஏங்குகிறேன் (I am dying for coffee)” என்று கூறி தனது மரணச் செய்தியை கிண்டல் செய்தார். மேலும், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான வீடியோக்களில் விரல்கள் சரியாக இருக்காது என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், தனது ஐந்து விரல்களையும் கேமராவில் எண்ணிக் காட்டி தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கீயுடன் (Mike Huckabee) இணைந்து மற்றொரு வீடியோவையும் நேதன்யாகு பகிர்ந்துள்ளார். அதில் தூதருடன் நடந்து சென்றபடி, “ஆம், நான் உயிருடன் தான் இருக்கிறேன்” என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், நேதன்யாகுவின் இந்த அடுத்தடுத்த வீடியோக்கள் அவரது பாதுகாப்பு குறித்த வதந்திகளுக்குப் பதிலடியாக அமைந்துள்ளன.

Soundarya

Recent Posts

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

7 minutes ago

“சிஸ்டத்தையே அடித்து நொறுக்கு!”… பாஜகவில் ஐக்கியமான ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்… ராகவ் சதாவின் ‘யூ-டர்ன்’ அரசியலை கிழித்துத் தொங்கவிடும் நெட்டிசன்கள்…!!!

ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முக்கிய முகமாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராகவ் சதா, திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய…

10 minutes ago

எறும்புகளின் இனப்படுகொலை..! ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு எரித்து வதைக்கும் கொடூரம்.. வைரல் வீடியோவால் அதிர்ச்சி..!!

ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு தீயிட்டு எரிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர்…

17 minutes ago

பால் போன்ற உடலுக்குச் சொந்தக்காரர்… தமன்னா காலில் விழுவேன்… சர்ச்சைக்கு பாலிவுட் நடிகர் அன்னு கபூர் விளக்கம்..!!

பாலிவுட் நடிகர் அன்னு கபூர், நடிகை தமன்னாவின் உடல் தோற்றம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'Aaj…

23 minutes ago

தேர்தல் முடிவுகளுக்கு பின்.. உதயநிதிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி… அதிர்ச்சியில் திமுகவினர்..!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று வருமான வரித்துறை (IT) சென்னை உயர்…

27 minutes ago

இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்!… ஆந்திராவில் திறக்கப்படும் மெகா சுரங்கம்… மே 2026-ல் மெகா ஓப்பனிங்…!!!

உலக அளவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வரும்…

29 minutes ago