சார்ஜ் போட்டபோது நேர்ந்த விபரீதம்… மின்சார கார் வெடித்து ஒரு கும்பமே பலி… பெரும் சோகம் ..!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சார்ஜ் செய்துகொண்டிருந்த மின்சார கார் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். அதிகாலை 3:30 மணியளவில் இந்தூரின் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் பகுதியில் உள்ள ஒரு மூன்று மாடி குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த வெடிவிபத்தினால் ஏற்பட்ட தீ குடியிருப்புக்கும் பரவியது. வீட்டில் ஒரு நிகழ்ச்சிக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் தீயின் தீவிரம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. இதனால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

வீட்டின் உரிமையாளர் மனோஜ் புகாலியா மற்றும் அவரது குடும்பத்தினர் தீயிலிருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால், மின்தடை காரணமாக வீட்டின் நவீன மின்னணுப் பூட்டு (Electronic lock) செயலிழந்ததால் கதவுகளைத் திறக்க முடியாமல் அவர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இறுதியில் கரும்புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Soundarya

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

50 minutes ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

1 மணத்தியாலம் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

1 மணத்தியாலம் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

1 மணத்தியாலம் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

1 மணத்தியாலம் ago