பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் வெளி உலகத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்து வரும் ‘அவா’ பழங்குடியின மக்களின் அரிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பழங்குடியினர் உரிமை ஆர்வலர்கள் இந்த நிகழ்வை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் குறிப்பிடுகின்றனர்.
சட்டவிரோத மரம் வெட்டுதல், வேட்டையாடுதல் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளால் தங்களின் வாழ்விடங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதால், உணவு தேடி இக்குழுவினர் வெளி ஆட்களை அணுகியிருக்கலாம் என ‘சர்வைவல் இன்டர்நேஷனல்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
https://twitter.com/the_hindu/status/2123000988508520718/video/1
இதனைத் தொடர்ந்து, பிரேசிலின் பழங்குடியினர் விவகார முகமையான ‘ஃபுனாய்’, அப்பழங்குடியினருடன் நேரடித் தொடர்பு கொள்ளாமல் அவர்களைப் பாதுகாக்கும் தனது கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதோடு, அவசரகாலப் பாதுகாப்புத் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளது.
