மரண மாஸ் சாரே..! 4,4,4,6,4,6 என அடித்து நொறுக்கி… இஷ் சோதியை பதம்பார்த்த இஷான் கிஷன்… நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரைத் தட்டித் தூக்கியது இந்தியா…!!

By Soundarya on மாசி 1, 2026

Spread the love
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுத்தது. குறிப்பாக, இஷ் சோதி வீசிய ஒரே ஓவரில் 28 ரன்களை விளாசிய இஷான் கிஷனின் ருத்ரதாண்டவம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. 12வது ஓவரில் இஷான் கிஷன் 4,4,4,6,4,6 என இஷான் சோதியை வீழ்த்தி தனது அரைசதத்தை எட்டினார்.

<

/div>

   
இஷான் கிஷனின் அதிரடி அரைசதத்தைத் தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் யாதவும் தனது பங்கிற்கு அரைசதம் அடித்து அணியின் ரன் விகிதத்தை மளமளவென உயர்த்தினர். இந்த ஜோடியின் அதிரடியால் இந்தியா இமாலய இலக்கை எட்டியது. பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டதால், நியூசிலாந்து அணியால் இலக்கை எட்ட முடியாமல் போனது. இதன் மூலம் இந்திய அணி தனது சொந்த மண்ணில் மற்றுமொரு டி20 தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.