உலகக்கோப்பை வெற்றி….! மைதானத்தில் காதலியை அறிமுகம் செய்த இஷான் கிஷன்…! யார் இந்த அதிதி ஹூண்டியா..?

By Devi Ramu on பங்குனி 10, 2026

Spread the love

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் இஷான் கிஷன் தனது காதலியான அதிதி ஹூண்டியாவை உலகிற்கு வெளிப்படையாக அறிமுகம் செய்துள்ளார். 2017-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றவரான அதிதி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல மாடல் மற்றும் தொழிலதிபராவார். இஷான் கிஷனை விட இரண்டு வயது மூத்தவரான அதிதியுடன், கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே அவர் காதலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களது காதல் விவகாரம் குடும்பத்தினருக்கும் தெரிந்திருப்பதால், விரைவில் திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் இஷான் கிஷனின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது; இறுதிப்போட்டியில் 54 ரன்கள் விளாசியது உட்பட தொடர் முழுவதும் 317 ரன்களைக் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். சஞ்சு சாம்சனுக்கு அடுத்தபடியாக இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் அவர் திகழ்கிறார். மைதானத்தில் இந்த வெற்றியைத் தனது காதலியுடன் கொண்டாடிய இஷான் கிஷனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இஷான் கிஷனின் இந்தத் திறமையான ஆட்டமும், அவரது காதல் அறிமுகமும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.