EPS-ன் மாஸ்டர் பிளான்… அதிமுகவில் திடீரென இணைந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை… அம்பாசமுத்திரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்….!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

அதிமுகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (Ex-ADSP) வெள்ளதுரையை, அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கக் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அறியப்படும் இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அஇபுதமமுக சார்பாக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 1,048 வாக்குகளைப் பெற்றிருந்தார். இவரின் புதிய வரவும், களமிறங்கும் சாத்தியமும் அதிமுக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொருபுறம், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இசக்கி சுப்பையா ஏற்கெனவே அம்பாசமுத்திரம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். தொகுதிக்குள் வேட்பாளர் போட்டி மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதால், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் களம் தற்போதே உச்சக்கட்ட பரபரப்பையும் சூட்டையும் எட்டியுள்ளது.