Connect with us

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல்.. பிரபல இயக்குனரின் படத்திற்கு இசையமைத்த இசைஞானி.. அட இப்படி கூட நடந்திருக்கா..?

CINEMA

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல்.. பிரபல இயக்குனரின் படத்திற்கு இசையமைத்த இசைஞானி.. அட இப்படி கூட நடந்திருக்கா..?

பாடல்களில் கிராமத்து இசையை புகுத்தி 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவையே தன் பாடல்களால் கட்டுக்குள் வைத்திருந்தவர் இசைஞானி இளையராஜா. இப்போது இருக்கும் பல 90ஸ் கிட்ஸ்-களுக்கு பிடித்த பாடல்களில் ஒன்று இவருடைய பாடலாக இருக்கும். இவரின் மெலோடி பாடல்களை போல் எந்த ஒரு இசையமைப்பாளர்களும் கொடுக்கவில்லை. இளையராஜா என்றால் கோபக்காரர், திமிர் பிடித்தவர், சம்பள விஷயத்தில் மிகவும் கராரான மனிதன் என பல சர்ச்சைகள் உள்ளது.

ஆனால் பல படங்களுக்கு குறைவான சம்பளம் வாங்கி இசையமைத்து கொடுத்திருக்கின்றார். சில படங்களுக்கு சம்பளமே வாங்காமல் கூட இசையமைத்திருக்கின்றார். இது பலருக்கும் தெரியாத ஒன்று தற்போது தனது கைவசம் சில படங்களை வைத்திருக்கின்றார். விடுதலை படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்கு இசையமைத்து வருகின்றார்.

   

இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகின்றார். என்னதான் பல சாதனைகளில் செய்திருந்தாலும், இவரை சுற்றி சர்ச்சைகள் ஏராளமாக இருக்கும்.

 

அதில் தற்போது ஒன்று காப்புரிமை பாடலுக்கு முழு உரிமை இசையமைப்பாளருக்கு என்று இளையராஜா உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாடல் ஆசிரியரும் உரிமை கூறினால் என்னவாகும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.  இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு தான் பாடல்களில் உரிமை உண்டு என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர் சம்பளமே வாங்காமல் ஒரு திரைப்படத்திற்கு பணியாற்றி இருக்கிறார் அதாவது பி வாசு இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள். அந்த சமயத்தில் இளையராஜா ஒரு படத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

இப்படத்தில் இளையராஜா கமிட்டாகி பணிகள் நடந்து கொண்டிருந்தது. பாடல்கள் முடியும் வரை சம்பளம் பற்றி எதுவுமே பேசாமல் இருந்தார் இளையராஜா. கடைசியாக சம்பளம் பற்றி பி வாசு கேட்கும் போது இப்பதான வந்திருக்கீங்க, முதல் படம் வேற.. நல்லா பண்ணுங்க.. எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாரா? இந்த தகவலை பி. வாசு ஒரு பேட்டியில் கூட தெரிவித்து இருப்பார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top