#image_title
தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.
எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார்.
அதே போல மற்ற நடிகர்களில் இருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது அவரின் ஈகை குணம்தான். பல நலத்திட்ட உதவிகளை செய்துள்ள அவர் திரைத்துறையில் உள்ளவர்கள் பிரச்சனையில் இருந்தபோதும் ஓடிச்சென்று உதவியுள்ளார்.
இதனால் அவர் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது அவரை யாருமே எதிர்த்து நிற்கவில்லை. தொடர்ந்து 3 முறை அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தால் அஜித்துக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஒரு சண்டை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அஜித் அப்போது ஷாலினியை திருமணம் செய்திருந்தார். திருமணத்துக்கு முன்பு ஒப்பந்தம் ஆன பிரியாத வரம் வேண்டும் என்ற திரைப்படத்தில் சில நாட்கள் அவர் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் அஜித் அவரை நடிக்க அனுப்ப மாட்டேன் என சொல்லிவிட்டாரம்.
இது சம்மந்தமான பஞ்சாயத்து அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் சென்றுள்ளது. அவர் அஜித்தை அழைத்து பேசியுள்ளார். அப்போதும் அஜித் பிடிவாதமாக இருக்க, கோபத்தில் விஜயகாந்த் அஜித்தை அறைந்துவிட்டாராம். அதனால் அஜித் விஜயகாந்த் மேல் கோபத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதனால்தான் விஜயகாந்த் மறைவுக்குக் கூட அஜித் வந்து கலந்துகொள்ள வில்லை என்று சொல்லப்படுகிறது. இதை விஜயகாந்த் ரசிகர் ஒருவர் அவரின் நினைவிடத்தில் பகிர்ந்துகொண்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் அப்படி நடந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…
பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…