ஈரான் கதையை முடிக்க டிரம்ப் முடிவா?… ரகசியத் திட்டம் லீக்… வெள்ளை மாளிகை கொடுத்த ‘அதிர்ச்சி ட்விஸ்ட்’…!!

By Gayathri on ஆவணி 18, 2026

Spread the love

அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன், டிரம்ப் நிர்வாகத்தின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவது பற்றி வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அயல்நாட்டுப் போர்களில் அமெரிக்கா தலையிடாது என்ற தனது முந்தைய வாக்குறுதிகளை மீறி, டிரம்ப் அரசு தற்போது அணு ஆயுதப் பயன்பாட்டிற்கான வரைமுறைகளைத் தளர்த்தி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஈரான் இன்னும் அணு ஆயுதம் தயாரிக்கும் திறனை முழுமையாக எட்டவில்லை என அமெரிக்க உளவுத்துறை திட்டவட்டமாகத் தெரிவிக்கும் நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேலின் எச்சரிக்கைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து டிரம்ப் நிர்வாகம் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் மீதான இத்தகைய அணு ஆயுதத் தாக்குதல் நடந்தால், அது மூன்றாம் உலகப் போராக உருவெடுத்து லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறிப்பதோடு, உலக அளவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என கிரீன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், அவருடைய இந்த பகிரங்கக் குற்றச்சாட்டுகள் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. கடந்த ஜூன் 2025-ஆம் ஆண்டில் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோதே, வெளிநாட்டுப் போர்களில் ஈடுபடக் கூடாது என்ற தனது தேர்தல் கால நிலைப்பாட்டை டிரம்ப் காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக கிரீன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.