‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலகிய சாய் காயத்ரி…. இப்ப என்ன செய்றாங்க தெரியுமா?… உங்க நிலைம கடைசில இப்படி ஆகிடுச்சே…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த தொடரில் கூட்டு குடும்பத்தை பற்றி கூறுவதால் இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இத்தொடர் 1150 எபிசோடுகளை கடந்து தற்போது சாதனையும் படைத்துள்ளது.

   

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. மூர்த்திக்கும் ஜீவாவிற்கு இடையில் சண்டை வெடித்துள்ளது. இதைத்தொடர்ந்து குடும்பம் பிரியுமா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென விலகிவிட்டார். கதை மற்றும் அடுத்து வர இருக்கும் காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லை, என் கெரியருக்கு செட் ஆகாது என்பதால் விலகிவிட்டேன் என அவர் காரணம் கூறி இருந்தார். இதைதொடர்ந்து புது ஐஸ்வர்யாவாக முன்பு நடித்து வந்த VJ தீபிகாவையே மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர் படக்குழுவினர்.

தற்பொழுது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய பின் தனது அம்மாவுடன் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். தற்பொழுது திருநாகேஸ்வரம் ராகு கோவில், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அவர் பூஜை செய்த வீடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by S A I G A Y A T R I (@saai_gayatri)