நடிகை ஹன்சிகா தனது நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்துரியா என்பவரை இன்று திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதை தொடர்ந்து அவர் தனது கணவருடன் ஹனிமூன் செல்வதற்கு முன்பு இந்த விஷயத்தை தான் செய்ய உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ஹன்சிகா இன்று மாலை ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டு கால பழங்கால அரண்மனையில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அந்த அரண்மனை பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பிருந்தே திருமண கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டு விட்டது.

நடிகை ஹன்சிகா மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து நடிகை ஹன்சிகாவும் அவரது கணவரும் இணைந்து ஆடிய நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

திருமணம் முடிந்ததும் ஹனிமூன் செல்வது வழக்கம். ஆனால் நடிகை ஹன்ஷிகா திருமணம் முடிந்ததும் ஹனிமூன் செல்லமாட்டார் என்ற தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் டிசம்பர் 6ஆம் தேதி மும்பையில் நடக்கும் ஒரு விளம்பர படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள போகிறாராம்.

இதை தொடர்ந்து அவர் மேலும் பல படசூட்டிங்கிலும் கலந்து கொள்ள இருக்கிறார் டிசம்பர் மாதத்தில் அனைத்து சூட்டிங்கையும் முடித்துவிட்டு அதன் பின்னர் தான் ஹன்சிகா தன் கணவருடன் ஹனிமூன் செல்ல இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

