நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்த நிர்வாகிகள் பலர் அதிருப்தியால் பின்வாங்கி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வேட்பாளர் போட்டியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், கூட்டணி இன்றி தனித்து களம் காண்பது தேர்தல் செலவுகளைப் பன்மடங்கு உயர்த்தும் என்றும், களப்பணியில் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
இது குறிப்பாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் கூட்டணிக்கு விருப்பம் தெரிவித்திருந்தும், தலைமை அதற்கு மாறாக எடுத்த முடிவே இந்தத் தயக்கத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தேர்தல் களத்தில் வேட்பாளராக நிற்பதற்குப் பல கோடி ரூபாய் செலவாகும் சூழலில், தனித்துப் போட்டியிட்டால் தங்களின் வெற்றி வாய்ப்பு மற்றும் நிதி நிலைமை கேள்விக்குறியாகும் எனப் பல தவெக நிர்வாகிகள் அஞ்சுகின்றனர்.
இதனால் வேட்பாளர் சீட் பெறுவதற்கு முன்பே கணிசமான தொகையைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும், பொருளாதார ரீதியாகப் பலவீனமான நிர்வாகிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாகத் தலைமைக்குத் தெரிவித்து வருவதால், தேர்தலுக்குத் தயாராகும் தவெகவிற்கு இது புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.
தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சொந்தக் கோட்டையான கொளத்தூரிலேயே…
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கோயில் திருவிழாவிற்கு வரி (சந்தா) வழங்க மறுத்ததற்காக தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகத்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்,…
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏர் கூலரை முறையாகப் பராமரிப்பதன் மூலம் ஏசிக்கு இணையான குளிர்ச்சியைப் பெற…
உடலில் தோல் மற்றும் தசை அடுக்கிற்கு இடையில் உருவாகும் கொழுப்பு கட்டிகள் 'லிப்போமா' என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை ஆரம்பத்தில்…
இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை சமரின் கவுர் ஆகியோர் பஞ்சாப்…