பஞ்சாப் சிங்கம் இனி ‘சிங்கிள்’ இல்லையா..? காதலியுடன் ஜாலியாகப் பயணிக்கும் அர்ஷ்தீப் சிங்… வாழ்த்துகளை குவிக்கும் நெட்டிசன்கள்..!!

Spread the love

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை சமரின் கவுர்  ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேருந்தில் ஒன்றாகப் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐதராபாத் விமான நிலையத்திற்கு இருவரும் கைகோர்த்தபடி வந்த நிலையில், பின்னர் வீரர்களுக்கான பிரத்யேகப் பேருந்திலும் சமரின் கவுர் அர்ஷ்தீப் சிங்குடன் அமர்ந்து சென்றது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமரின் கவுர் ஒரு வளர்ந்து வரும் பஞ்சாபி நடிகை மற்றும் மாடல் ஆவார். ’83’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், சமீபகாலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் மைதானத்திற்கு நேரில் வந்து அர்ஷ்தீப் சிங்கிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறார். முன்னதாக, அர்ஷ்தீப் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பெண்ணின் கையைப் பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்தபோதே, அது சமரின் கவுர் தான் என்று ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டனர்.

இந்த வைரல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இந்த ஜோடி மிகவும் பொருத்தமாக இருப்பதாகப் பாராட்டி வரும் நிலையில், மற்றவர்கள் போட்டியின் தீவிரமான நேரத்தில் தனிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை அர்ஷ்தீப் சிங் அல்லது சமரின் கவுர் தரப்பிலிருந்து தங்களது உறவு குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Swetha

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

6 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

6 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

6 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

7 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

7 மணத்தியாலங்கள் ago