“தங்களுக்கே சொந்தம் என மார்தட்டும் ஈரான்”… சர்வதேச அரங்கில் தனித்து விடப்படுகிறதா அமீரகம்?…. ஈரான் விடுத்த கடைசி எச்சரிக்கை…!!!

By Rajeshwari on பங்குனி 22, 2026

Spread the love

ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள அபு மூசா, கிரேட்டர் டன்ப் மற்றும் லெஸ்ஸர் டன்ப் ஆகிய மூன்று தீவுகளும் தங்களுக்கே சொந்தம் என ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.

இந்தச் சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தத் தீவுகள் மீதான ஈரானின் ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டிருந்தன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், இந்தத் தீவுகள் பிரிக்க முடியாத தங்களின் ஒரு பகுதி என்றும், இதில் மூன்றாவது தரப்பின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளது.

   

இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் தரப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தத் தீவுகளின் இறையாண்மை குறித்து கேள்வி எழுப்புவது பிராந்திய அமைதியைக் குலைக்கும் செயல் என ஈரான் கூறியுள்ளது.

   

அதேபோல், ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இந்த விவகாரத்தை சர்வதேச மயமாக்க முயல்வது தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என ஈரான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பிரச்சனை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதோடு, வளைகுடா பிராந்தியத்தில் ஒருவித போர் அச்சத்தையும், அரசியல் ரீதியான மோதல் போக்கையும் உருவாக்கியுள்ளது.