கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பலரும் அடிக்கடி டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், வெயில் காலங்களில் அளவுக்கு அதிகமாக டீ குடிப்பது உடலில் பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தேநீரில் உள்ள கஃபைன் மற்றும் டானின் ஆகிய பொருட்கள் உடலில் நீர்ச்சத்துக் குறைபாட்டை உண்டாக்கும்.
மேலும் ஏற்கனவே வெயிலால் உடல் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், சூடான டீயை அடிக்கடி அருந்துவது உடலின் உள் வெப்பநிலையை மேலும் உயர்த்தி, செரிமான கோளாறுகள் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும், டீயில் உள்ள கஃபைன் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுப்பதால், ரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெயில் காலத்தில் தாகத்தைத் தணிக்க டீக்கு மாற்றாக இளநீர், மோர், நன்னாரி சர்பத் அல்லது பழச்சாறுகளை அருந்துவதே உடல் நலத்திற்கு உகந்தது. எனவே, தேநீர் பிரியர்கள் கோடை வெயிலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, டீ குடிக்கும் அளவைக் குறைத்துக் கொள்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும்.
