#image_title
நடிகர் விஜய் தான் இன்றைய தமிழ்நாட்டு சினிமா மற்றும் அரசியலில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் விஜய். கடந்த வருடம் தான் நேரடியாக தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கிலும் கால் பதித்தார் விஜய். இனி நடிகைகள் போல, பிற மொழிப் படங்களிலும் நடித்து பான் இந்தியா நடிகராக மாறப்போகிரார் என்று நினைத்திருந்த நேரத்தில், சினிமாவிற்கே முட்டுக் கட்டைப் போட்டு, அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் நடிகர் விஜய்.
#image_title
நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் சினிமாவில் உட்சபட்ச இடத்தில், அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வரும் நேரத்தில் அரசியலில் ஈடுபடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது தனது 68-வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கட்பிரபு இயக்கத்தில் சையின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஜய்.
#image_title
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை பதிவு செய்துள்ள விஜய், லெட்டர் பேட் மூலம் அறிக்கையையும் வெளியிட்டார். ஒப்புக் கொண்டுள்ள படத்தை முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். ஆக 68-வது படத்தோடு அவரது திரைப்பயணத்திற்கு முழுக்கு போட்டு விடுவார் என அனைவரும் கூறி வந்தனர். ஆனால் இல்லை இல்லை, அதன் பிறகு ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
#image_title
மே மாதம் விஜய்யின் தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும், RRR படத்தைப் போன்று பிரம்மாண்ட படக்களை தயாரித்த DVV நிறுவனம் விஜய்யின் 69-வது படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, அல்லது தெலுங்கு இயக்குநர் இப்படி அப்படத்தின் இயக்குநர் லிஸ்ட் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்நிறுவனத்தின் சார்பில் தளபதி 69 படத்திற்கான தலைப்பு “HungryCheetah” என்று பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பிரபல சினிமா விமர்சகர் கிறிஸ்டோபர் கனகராஜ் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார். இது உண்மையா என்பதை பொருத்திர்ந்து பார்ப்போம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…