அடடே இவர்தான் சூப்பர் சிங்கர் புகழ் பாடகி அனுராதா ஸ்ரீராமின் கணவரா?… இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்களா?… புகைப்படம் இதோ…

By Begam on தை 3, 2023

Spread the love

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்ற புகழ்பெற்ற பாடகி அனுராதா ஸ்ரீராம் தன் கணவருடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘பம்பாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலரோடு மலரிங்கு’ என்ற பாடலை குருப் பாடலாக பாடி சினிமாவிற்கு அறிமுகமானவர் பாடகி அனுராதா ஸ்ரீராம். இதைத் தொடர்ந்து வரும் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அன்பென்ற மழையிலே’ என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாநார். அதன் பின்னர் இவர் பல படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

   

   

தன்னுடைய ஆறு வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கியவர். தற்பொழுது இவர்  இசைக்கச்சேரிகள்,, இசை நிகழ்ச்சிகள் என பலவற்றை நடத்திக் கொண்டு வருகிறார். பாடகி அனுராதா ஸ்ரீராம் பக்தி, காதல், துள்ளல், கில்மா என 4  பரிமாணங்களிலும் புகழ்பெற்றவர். பக்தி என்று எடுத்துக் கொண்டால் இவர் பாடிய ‘அன்பென்ற மழையிலே’ என் வாசல் வாடியம்மா, இந்தா வந்துட்டேன் அம்மா என்று இவர் பாடிய பக்தி பாடல்கள் ஒலிக்காத திருவிழாக்களே இல்லை என்று கூறலாம்.

 

அந்த அளவிற்கு இவர் பாடிய பக்தி பாடல்கள் பிரபலம். ‘காதல்’ என்று பார்த்தால் ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு’, கண்ணன் வரும் வேளையில், மல்லிகையே மல்லிகையே, லேசா லேசா, நலம் நலம் அறிய ஆவல், மீனம்மா, ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என பல காதல் பாடல்கள் பாடியுள்ளார்.

இவர் பாடிய அப்படி போடு போடு, அச்சம் அச்சம் இல்லை, கண்ணம்மா மீனு வாங்க போலாமா என பல துள்ளல் வகை பாடல்கள் இன்றும் பிளேலிஸ்ட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தொடர்ந்து நிலவைக் கொண்டு வா, டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா, ஓ போடு என பல கில்மா பாடல்களையும் பாடியுள்ளார்.

இப்பாடல்களை கேட்கும் பொழுது ‘அன்பென்ற மழையிலே’ என்ற பாடலை பாடிய அனுராதா வா இதையும் பாடினார் என ஆச்சரியமாக இருக்கும். இவ்வாறு நான்கு  பரிமாணங்களிலும் கலக்கியவர் பாடகி அனுராதா ஸ்ரீராம். இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவர் அனைத்து மொழிகளிலும் இதுவரை 4000ம் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

பாடகி அனுராதா ஸ்ரீராம் பாசுரம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரை அமெரிக்காவில் தான் சந்தித்தாராம். இதை தொடர்ந்து இருவரும் பழகும் வாய்ப்பு கிடைக்கவே அப்படி அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாடகி அனுராதா ஸ்ரீராம் தன் கணவரோடு இணைந்து இருக்கும் புகைப்படம்  இணையத்தில் வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகிறது.