நடிகர் ராஜ்கிரண் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரையுலகில் அறியப்படுகிறார். இவர் சில திரைப்படங்களை தானே தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் இவரே.
என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, சண்டக்கோழி,ரஜினிமுருகன், கொம்பன் , மஞ்சப்பை போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள். ராஜ்கிரனுக்கு ஜீனத் பிரியா என்று ஒரு மகள் உள்ளார். அவருக்கும் சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
நடிகர் முனீஸ் ராஜா சன் டிவி சீரியலில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். முதலில் இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் சமரச பேச்சு வார்த்தை மூலம் முனீஸ் ராஜாவின் வீட்டில் காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால் இயக்குனர் ராஜ்கிரண் குடும்பத்தினர் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த சமயத்தில் முனீஸ் ராஜாவின் நண்பர்கள் ‘முனீஸ் ராஜா,ஜீனத் பிரியா இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்து விட்டனர்’ என்று கூறி வருகின்றனர்.
தற்பொழுது முனீஸ் ராஜா இந்த செய்தியை பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது ‘பேஸ்புக் மூலமாக பழகி இருவரும் அறிமுகமானோம். பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. காதல் அடுத்த கட்டமான கல்யாணத்தை நோக்கி நகர்ந்த போது ,நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டோம்.
எனது வீட்டிலும் அவர்களது வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லோரையும் சிரிக்க வைக்கிற நகைச்சுவை நடிகரான நான் என்னுடைய வாழ்க்கையை நினைத்து சிரிக்கிறதா? அழுகிறதா? என்று தெரியவில்லை. ஒரு நல்ல விஷயம் நடக்கிறப்ப யாரும் மனசும் கஷ்டப்படக்கூடாது. அப்படின்னு நான் நினைக்கிறேன் எப்படியாவது இந்த பிரச்சனை நல்ல படியா முடிச்சு ஒரு நல்ல ஒரு செய்தியை சீக்கிரமா சொல்லுவேன்’ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…
டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…