அட இவர்தான் நம்ம இமான் அண்ணாச்சியின் மகளா?… நம்ம அண்ணாச்சி மாதிரியே இருக்காங்களே…வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

By Begam on கார்த்திகை 13, 2022

Spread the love

காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான இமான் அண்ணாச்சியின் மகள் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இமான் அண்ணாச்சியை பார்த்தாலே வடிவேலுவை போல சின்ன குழந்தைகளுக்கு குஷி தான். அதிலும் அவரை கலாய்ப்பது என்றால் அப்படி ஒரு சந்தோஷம். அவரும் இது போன்ற விஷயங்களை ஜாலியாகவே எடுத்துக் கொள்வார். இமான் அண்ணாச்சியின் உண்மையான பெயர் இமானுவேல். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

   

   

சின்னத்திரையை பொருத்தவரையில் முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்தார். அதில் ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ என்ற பெயரில் இவர் தொகுத்து வழங்கிய காமெடி நிகழ்ச்சி மிகப் பிரபலமானது. இதை தொடர்ந்து அவர் சன் டிவியிலும் அதே ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

இதை தொடர்ந்து மழலை மாறாத சிறுவர்களுக்கான ‘குட்டிஸ் சுட்டிஸ்’ நிகழ்ச்சியை  தொகுத்து வழங்கினார். இதில் வரும் குழந்தைகள் அண்ணாச்சியை கேட்காத கேள்விகள் எல்லாம் கேட்கும். அதையெல்லாம் ஜாலியாக எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்குவார்.

இமான் அண்ணாச்சி முதன்முதலாக வெள்ளித்திரையில் ‘சென்னை காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் கால் பதித்தார். இதை தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னை காதல், தலைநகரம், வேட்டைக்காரன், கோ, நீர் பறவை, வாகன், மரியான், நையாண்டி, ஜில்லா, கயல், புலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் பிரபலமான இவர் பிக் பாஸ் சீசன் 5லும் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் மொத்தம் இவர் 70 நாட்கள் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இமான் அண்ணாச்சி தனது மகளின் பிறந்தநாளை கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடியுள்ளார். தற்பொழுது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்…