பிரபல நடிகை சினேகாவின் மகளா இது?… இவ்வளவு பெருசா வளந்துட்டாங்க…. வைரலாகும் கியூட் புகைப்படங்கள் உள்ளே…

By Begam on புரட்டாதி 26, 2022

Spread the love

நடிகை சினேகா தனது மகள், மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரை உலகின் ‘புன்னகை அரசி’ என்று போற்றப்படும் நடிகை சினேகா, 2000 ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நிலபக்சி’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் ‘என்னவளே’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குடும்ப பாவமான கேரக்டர்களை தேர்ந்துதெடுத்து நடித்தார்.

   

   

இதைத் தொடர்ந்து அவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம். பம்மல் கே சம்பந்தம். புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில் என இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகியது. 2011 ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர்களுக்கு விகான் என்ற மகனும், ஆத்தியந்தா என்ற மகளும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை சினேகா அவ்வப்போது தனது புகைப்படங்களையும், குழந்தைகளின் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றுவார்.

அந்த வகையில் தற்பொழுது மகன் மகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை சினேகாவின் மகளை பார்த்த ரசிகர்கள் ‘ஆத்தியந்தா இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே?’ என்று கூறி வருகின்றனர். தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.