#image_title
நம்பியார் கேரளாவில் வட மலபார் பகுதியில் உள்ள கண்ணூரில் பிறந்தவர். இவரின் முழு பெயர் மஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதாகும். தனது சிறு வயது முதலே நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தவர் நம்பியார். அதனால் நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக குழுவில் சேர்ந்து நடிப்பை பயின்றார் நம்பியார்.
தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்ட நம்பியார் 1935 ஆம் ஆண்டு ‘பக்த ராமதாஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த படம் ஹிந்தி மற்றும் தமிழில் எடுக்கப்பட்டது. அதில் அவர் டி கே சம்பங்கி உடன் நகைச்சுவை நடிகராக நடித்தார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தாலும் நம்பியார் விரைவில் வில்லன் வேடத்தில் நடிக்க தொடங்கினார். ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமை நம்பியாருக்கு மட்டுமே உண்டு.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்தவர் நம்பியார். 1950, 60, 70களில் மிகப் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக நம்பியார் இருந்தார். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நம்பியார். பெரும்பாலானது இவர் நடித்தது வில்லன் கதாபாத்திரம் தான். வில்லன் என்றாலே நம்பியார் தான் என்ற அளவுக்கு பெயர் பெற்றவர்.
தமிழ் திரைப்படங்களில் பிரபலமான பிறகு நம்பியார் நாடக மன்றம் மற்றும் நாடக குழுவை தொடங்கினார். சினிமாவில் நடித்துக் கொண்டே நாடகங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருந்தார் நம்பியார். எம்ஜிஆர் சிவாஜி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியவர் நம்பியார்.
நம்பியார் நடித்த படங்களில் எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், நாளை நமதே, படகோட்டி, திருடாதே, என் அண்ணன், காவல்காரன், குடியிருந்த கோவில் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி அவரது கேரியரில் பிரபலமானவை ஆகும். என்னதான் படங்களில் வில்லனாக நடித்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அப்படியே எதிர்மறையான குணத்தை கொண்டிருந்தவர் நம்பியார்.
நம்பியார் ஒரு சுத்த சைவ உணவை உண்பவர் மற்றும் டீ டோட்டலராகவும் இருந்துள்ளார். சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் தீவிர பக்தராகவும் இருந்து வந்துள்ளார் நம்பியார். அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஐயப்பனுக்கு மாலை போட்டு சன்னதிக்கு சென்று தரிசனம் செய்து வந்தவர். அதனால் அவரை மகா குருசாமி என்று மக்கள் அழைத்தனர். கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட கன்னி சுவாமிகளுக்கு குரு சாமியாக இருந்தவர் நம்பியார். அத்தகைய பக்தியுள்ள மனிதனாக இருந்த நம்பியார் சபரிமலை சீசனிலே ஐயப்பனை நினைத்துக் கொண்டே தன் உயிரை நீத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…