அம்பானி வீட்டில் நயன்- விக்கிக்கு இவ்ளோ மரியாதையா?… ஜவான் படத்துக்கு அப்புறம் ரேஞ்சே மாறிடுச்சே…!

By Begam on புரட்டாதி 21, 2023

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார்.

   

இவர் இறுதியாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த படத்தின் பிரமோஷனுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நயன்தாரா புதிய கணக்கு ஒன்றையும் தொடங்கினார்.

   

 

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் ,  திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்ததும் நாம் அனைவரும் அறிந்ததே.

தற்பொழுது நயன்தாரா தனது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் சூட்டியுள்ளார். இரண்டு குழந்தைகளும் அழகாக மளமளவென்று வளர்ந்து விட்டனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவன் இணைந்து அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டுள்ளார்.  இந்த விழாவில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கு ஜவான் படவெற்றி தான் காரணம் என கூறிவருகின்றனர் இணையவாசிகள்.  தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…