தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள நிலையில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கும் இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் ட்ராவல் கதையை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றியும் அடைந்துள்ளது. இதற்கு காரணம் இந்தப் படத்தில் விஷாலுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் போட்டதுதான் என ஒட்டுமொத்த ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
‘பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு கேக்குதா’ என்கிற காட்சிகள் மற்றும் பேருந்தில் சில்க் ஸ்மிதாவை பார்த்தவுடன் எஸ் ஜே சூர்யா ஆளே மாறி நடிக்கும் நடிப்பு எல்லாம் பார்த்த ரசிகர்கள் அவரை நடிப்பு அரக்கன் என பாராட்டி வருகின்றனர். 4 நாட்களில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு தான்.
ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஜாக்கி பாண்டியன் வேடத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவும், மதன் பாண்டியன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப்பை நடிக்க வைக்க முடிவு செய்தாராம் இயக்குனர். ஆனால் கதையை கேட்டதும் எஸ்.ஜே.சூர்யா இரண்டையும் தானே நடிப்பதாக கூறி வெற்றிகரமாக நடித்து சாதித்து காட்டியுள்ளார்.
சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…
கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…
மதுநாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்திக் நகர், அஞ்சையா நகர் பகுதியில் மின்தாக்குதலுக்குள்ளாகி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…
பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து…
மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…