தமிழ் சினிமாவில் வில்லனாகவும் , குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர்1986 இல் கன்னடத்தில் வெளியான ‘ஆனந்த்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஒடியா, ஆங்கிலம் என 11 மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார்.
பகவதி, தமிழன் படத்தில் விஜய்க்கு எதிராக வில்லன் வேடத்தில் நடித்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி 2004ல் கில்லி திரைப்படத்தில் அப்பா ரோலில் நடித்து பட்டையை கிளப்பினர். தனுஷின் உத்தமபுத்திரன் படத்திலும் கலக்கலாக நடித்திருப்பார். இவர் தற்பொழுது பல மொழிகளில் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.
கடந்த சில வருடங்களாக இவர் தமிழில் நடிப்பதில்லை என்றாலும் ,தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்பொழுதும் நடித்து வருகிறார். இவர் Rajoshi Barua என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி தனது 60வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அஸாமின் கவுகாத்தியை சேர்ந்தவர் ரூபாலி. அவர் கொல்கத்தாவில் ஒரு ஃபேஷன் ஸ்டோர் நடத்தி வருகிறார். ரகசியமாக நடந்த இத்திருமணத்தில் அவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இவர் தனது காதல் மனைவியுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர அப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…