“அதிமுக கோட்டையில் 163?”… எடப்பாடி போட்ட பலமான ஸ்கெட்ச்… அமித்ஷா கொடுத்த அந்த ‘கிரீன் சிக்னல்…. திமுக-விற்கு செக் வைத்த அதிமுக…!!!

Spread the love

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வரவிருக்கும் தேர்தலில் அதிமுக சுமார் 163 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. திமுகவும் அதன் ‘உதயசூரியன்’ சின்னத்தில் 163 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக அதிமுகவும் அதே எண்ணிக்கையிலான இடங்களில் களமிறங்கித் தனிப்பெரும்பான்மையைப் பெற வியூகம் வகுத்துள்ளது.

மேலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை, பாஜகவுக்கு 30 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 இடங்களும், ஐஜேகே, புதிய நீதி கட்சி மற்றும் ஜான் பாண்டியனின் கட்சி ஆகியவற்றிற்கு தலா 2 இடங்களும் வழங்க அதிமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றை ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே போட்டியிட வைப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க முடியும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். அமித்ஷாவுடனான இந்தச் சந்திப்பு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த தெளிவான நகர்வுகள், 2026 தேர்தலை எதிர்கொள்ள அதிமுக இப்போதே முழுவீச்சில் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது.

Rajeshwari

Recent Posts

BIG BREAKING: விஜய் முதல்வராவதில் சிக்கல்..? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…

7 minutes ago

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – லிஸ்டில் உங்க ஊர் இருக்கா..?

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி…

7 minutes ago

எம்.எல்.ஏ ஆனதும் இப்படியா..? கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டம் போடும் தவெக MLA … வைரலாகும் பகீர் வீடியோ…!!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…

19 minutes ago

“ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்” விஜய்யின் வெற்றியையும் த்ரிஷாவின் பிறந்தநாளையும் முடிச்சுப் போட்ட பிரபலங்கள்..!!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…

24 minutes ago

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

26 minutes ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

29 minutes ago