நடுத்தர வர்க்க மனிதருக்கு நேர்ந்த விபரீதம்… நீங்களும் E-Bike டீலர்ஷிப் எடுக்கப் போறீங்களா?… ₹7.5 லட்சத்தை சுருட்டிய கும்பல்… போலி இணையதளத்தை நம்பி லட்சங்களை இழந்த பரிதாபம்…!!!

By Rajeshwari on பங்குனி 16, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் மின்சார இருசக்கர வாகன டீலர்ஷிப் வழங்குவதாகக் கூறி, நபர் ஒருவரிடம் ₹7.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர், ஒரு பிரபல நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை உரிமையைப் பெறுவதற்காக இணையதளத்தில் தேடியபோது, மோசடி கும்பல் உருவாக்கிய போலி இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.

அதன் பிறகு, நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட மர்ம நபர்கள், அவரிடம் போன் மூலம் பேசி, உரிமம் வழங்குவதற்கான கட்டணம், ஆவணப் பதிவு மற்றும் இதர செலவுகள் எனக் கூறிப் பல்வேறு தவணைகளாக மொத்தம் 7.5 லட்ச ரூபாயைப் பெற்றுள்ளனர். பணத்தைச் செலுத்திய பிறகு, அந்த நபர்களிடமிருந்து முறையான பதில் ஏதும் வராததைக் கண்டு சந்தேகமடைந்த அவர், நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனடியாக ஜபல்பூர் காவல் நிலையத்தின் சைபர் பிரிவில் அவர் புகார் அளித்தார்.

   

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மோசடி கும்பல் பயன்படுத்திய வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இணையதளம் மூலம் இத்தகைய வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது, அதிகாரப்பூர்வ முகவரிகளை நேரில் சரிபார்க்க வேண்டும் என்றும், முன்பணம் செலுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.