தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நடிகை நயன்தாரா. தற்பொழுது 37 வயதானாலும் கூட இன்னும் இளமை தோற்றத்துடன் ரசிகர்களை வசிகரிக்கும் நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் அவனை ஜூன் 9 அன்று திருமணம் செய்து கொண்டார்.
மலையாளத்தில் 30 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நயன்தாரா, ‘ஜென்டில்மேன் 2’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதை இதைத்தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, அஜித், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் டென் ஹீரோயின்களில் ஒருவரானார். தற்பொழுது தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இவர் நடிப்பில் காட் பாதர், கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75போன்ற படங்கள் உருவாகி ரிலீஸ்க்காக காத்திருக்கின்றன. தற்பொழுது நடிகை நயன்தாரா சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. அதாவது நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஏகே 62 படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்றும், அந்த படத்திற்காக அவர் ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்றும் தகவல்கள் சமீபத்தில் வெளியானது.
தற்பொழுது மற்றுமொரு சூடான தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா தன்னுடைய 20 நாள் கால் சீட்டுக்கு மட்டும் ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்குகிறாராம். விளம்பரங்களில் நடிக்க ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். இதைக் கேட்ட இளம் நடிகைகள் ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளை வழங்குவதற்காகப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…
சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைது…
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…
இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாபெரும் வெற்றியைத் தராததால் தமிழக முதலமைச்சர் விஜய் சற்று அதிருப்தியில் உள்ளதாகவும், திமுக மற்றும் அதிமுக…
நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்குவது குறித்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தேசிய…