இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுனிதா வில்லியம்ஸ். இவர் நாசாவில் விண்வெளி வீரராக இருக்கிறார். நாசா போயிங் உடன் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் போட்டது. போயிங் தயாரிக்கும் விண்கலத்தில் ஸ்பைஸ் ஸ்டேஷனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வைப்பதாக பேசப்பட்டது. அதன் காரணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்குள் கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவை சேர்ந்த பட்சே வில்மோரும் இணைந்து சென்றனர்.

நாசாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட போயிங் இன் ஸ்டார்லிங்க் விண்கலத்தில் இவர்கள் இருவரும் விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு சென்று பணியை முடித்துவிட்டு எட்டு நாட்களுக்குள் பூமிக்கு திரும்பி விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதால் விண்கலத்தை பூமிக்கு நோக்கி உந்தி செல்லும் அழுத்தத்தை அளிக்கும் இயந்திர அமைப்பில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் எந்த நாட்களில் கடந்த பிறகும் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி உள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இரண்டு மாத முயற்சிக்குப் பிறகு ஸ்டாலினர் விண்கலத்தில் கோளாறு சரி செய்யப்பட்டாலும் அதன் முழுமையான பாதுகாப்பு குறித்த சந்தேகம் இருக்கிறது. அவர்கள் இருவரும் பூமிக்கு பாதுகாப்பாக வரவேண்டும். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்றனர்.
அதன் காரணமாக விண்கலத்தில் இருக்கும் எந்திர கோளாறு பொறுமையாக சரி செய்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதாம் இருவரும் பூமிக்கு வருவார்கள் என்று நாசா பத்திரிக்கையாளர் பேட்டியில் கூறியிருந்தது. இந்நிலையில் அளவுக்கு அதிகமாக விண்வெளி மையத்தில் இருந்தால் அங்கு இருக்கும் இருவரும் உடல் நலத்தில் தீவிரமான பாதிப்புகள் ஏற்படலாம். சுனிதா வில்லியம்ஸ் உடல் நலம் இல்லாமல் இருக்கிறார் என்ற செய்திகள் பரவி வந்தன.

இந்த வதந்தியை குறித்து நாசா விளக்கம் அளித்து இருக்கிறது. அவர்கள் கூறியது என்னவென்றால் சுனிதா வில்லியம்ஸ் நலமோடு இருக்கிறார். அவருக்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை. நாங்கள் தவறாமல் அவர்கள் உடல் நலனை கண்காணித்து வருகிறோம் என்று விளக்கம் அளித்து இருக்கிறது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் இருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.
