இளைய தளபதியின் ‘மாஸ்டர்’ பட நடிகையா இவர்?…என்ன ஆச்சு இவருக்கு…இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ…

By Begam

Published on:

நடிகை மாளவிகா மோகனன் விமான நிலையத்தில் இருந்தபடி எடுக்கப்பட்ட சமீபத்திய  புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகை மாளவிகா மோகனன் கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனின் மகளான இவர், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

இதைத் தொடர்ந்து அவர் விஜய் ஜோடியாக ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தனுஷ் ஜோடியாக ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மாளவிகா ஒரு ஹிந்தி படங்களிலும் மற்றும் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

சமுகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மாளவிகா மோஹனன். தற்பொழுது அவர் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், ‘மாஸ்டர்’ பட நடிகையா இவர்? இவருக்கு என்ன ஆச்சு ? இப்படி உள்ளாரே.’என்று கமெண்ட் செய்து வருகின்றனர். வைரலாகும் புகைப்படங்கள் இதோ…