கயல் சீரியலில் தற்பொழுது நீண்ட நாட்கள் கழித்து நடிகை அபிநவ்யா மீண்டும் சீரியலுக்குள் நடிக்க வருகிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாக வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று ‘கயல்’. இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் முன்னணியில் உள்ளது. இந்த சீரியலில் கயல் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சைத்ரா ரெட்டி. அப்பாவினால் கைவிடப்பட்ட தனது குடும்பத்தை ஒரு மூத்த மகளாக எடுத்து நின்று, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் எப்படி போராடுகிறார் என்பதே இந்த சீரியலின் கதை.

இவருக்கு ஜோடியாக எழிலரசன் கதாபாத்திரத்தில் ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் நடித்துக் கொண்டு வருகிறார். இதற்கு சீரியலுக்கு அடுத்ததாக டிஆர்பியில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் முன்னணி இடத்தில் உள்ளது. இந்த இரண்டு தொடர்களும் பெண்களை மையப்படுத்தி எடுப்பதால் இல்லத்தரசிகளை வெகுவாக வந்துள்ளது.

இந்நிலையில் கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை அபிவ்நயா திரும்பவும் சீரியலில் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது. இவர் பிரசவம் காரணமாக தொடரை விட்டு விலகி இருந்தார் .கடந்த நவம்பர் மாதம் இவருக்கு குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து குழந்தை பிறந்த ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் தற்போது கயல் சீரியலில் நடிகை அபிநவ்யா அதே கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இப்பொழுது எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சீவ் குறித்த காட்சிகள் இரண்டு வாரங்களாக சீரியலில் காட்டப்படவில்லை. நடிகர் சஞ்சீவ் குறித்த காட்சிகள் ஏன் இதுவரை காட்டப்படவில்லை.

இனிமேலாவது இவர் காட்சிகள் காட்டப்படுமா? அல்லது நடிகர் சஞ்சீவ் இந்த சீரியலை விட்டு விலகி விட்டாரா? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.ர் மேலும் இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியும் வருகின்றனர்.
