NDA கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்?…. டிடிவி தினகரனின் அழைப்பால் அதிரும் தமிழக அரசியல் களம்… அதிமுகவில் மீண்டும் ஒரு மெகா கூட்டணி…!

By Nanthini on தை 26, 2026

Spread the love

அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவாளர்கள் சமீபகாலமாக மாற்றுக்கட்சிகளை நோக்கி நகர்ந்து வருவது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் பலத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஓபிஎஸ் அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், டிடிவி தினகரன் அவர்கள் ஓபிஎஸ்-ஐ “அம்மாவின் உண்மைத் தொண்டர்” என்று பாராட்டியதோடு, தன்னை வளர்த்து வாழ வைத்த இயக்கத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய தருணம் அவருக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனின் இந்த அழைப்பு, ஓபிஎஸ் அவர்களை மீண்டும் ஒரு வலுவான கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஓபிஎஸ் அவர்கள் விரைவில் NDA கூட்டணி பக்கமே வருவார் என்று தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், இது அதிமுகவின் பிரிந்து கிடக்கும் அணிகளுக்கிடையே புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம். தொண்டர்களின் ஆதரவை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கும் ஓபிஎஸ், தினகரனின் இந்த அழைப்பை ஏற்று பாஜாக தலைமையிலான கூட்டணியில் இணைவாரா அல்லது தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுப்பாரா என்பது வரும் நாட்களில் தெளிவாகும்.