அதிர்ந்த திரையுலகம்!… அடுத்த டார்கெட்டா?… சல்மானுடன் நடித்தால் உயிருக்கு ஆபத்தா?… நயன்தாராவுக்கு விடுக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை…!!

By Gayathri on ஐப்பசி 20, 2026

Spread the love

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் எவ்வித காயங்களுமின்றி அவர் உயிர் தப்பினார். சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதன் காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பிஷ்னோய் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சல்மான் கானுடன் புதிய திரைப்படத்தில் இணைந்து நடித்துவரும் நடிகை நயன்தாராவின் பாதுகாப்பு குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் அவர் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

   

மேலும், சல்மான் கான் உடன் பணியாற்றும் அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினருக்குத் தேவையான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தயாரிப்புத் தரப்பும், காவல்துறையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடிகை நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ போன்ற படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் வேளையில், இந்தச் சூழல் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலக வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.