திமுகவின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றுவதிலும், எதிர்கால அரசியலைக் கையாள்வதிலும் உட்கட்சிக்குள் நுட்பமான நகர்வுகள் நடந்து வருவதாகத் தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலினை விடக் கனிமொழிக்கு அரசியல் அனுபவமும், தொடர்புகளும், முதிர்ச்சியும் அதிகம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை திமுகவின் தலைமைப் பொறுப்பை கனிமொழி ஏற்றால், அவரது அரசியல் ஆளுமை மற்றும் பெண் வாக்காளர்களின் ஆதரவு காரணமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யால் அவரை எதிர்த்து அரசியல் செய்வது கடினமாக இருக்கும் என்றும், குறிப்பாகப் பெண்களின் வாக்குகள் இயல்பாகவே கனிமொழிப் பக்கம் சாயக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், கனிமொழியின் அரசியல் வளர்ச்சியைத் தடுத்து, உதயநிதியை திமுகவின் முதன்மை முகமாகவும் அடுத்த தலைவராகவும் நிலைநிறுத்தும் நோக்கத்திலேயே, இந்த விவகாரத்தின் பின்னணியில் திட்டமிட்ட அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டு, அவர் கைது செய்யப்படும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வுச் செய்தி சுட்டிக்காட்டுகிறது.
