பொது இடத்தில் இப்படியா?…. அந்த உடையில் ஓவர் கிளாமர் காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்…. வைரல் கிளிக்ஸ்….!!!!

By Nanthini on மாசி 21, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

   

 

அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அவ்வகையில் மும்பையில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் நட்சத்திரங்களுக்கு கொடுத்த ஒரு பார்ட்டிக்கு கீர்த்தி சுரேஷ் சென்று உள்ளார் .

அங்கு அவர் கிளாமர் லுக்கில் வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.