இந்த காரணத்தால் தான் நடிகர் கமலுடன் ரகுவரன் நடிக்கவில்லையா?… வைரலாகும் ரகுவரன் முன்னாள் மனைவியின் நேர்காணல் இதோ!…

By Begam

Published on:

நடிகர் கமலுடன் இணைந்து ரகுவரன் நடிக்காததன் காரணம் பற்றி ரகுவரனின்  முன்னாள் மனைவி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

80களில் தமிழில் அறிமுகமான முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ரகுவரன்.1948 இல் கேரளாவில் பிறந்தவர் ரகுவரன். ‘ஏழாவது மனிதன்’ படம் தான் ரகுவரன் நடித்த முதல் படம். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார்.

   

வித்தியாசமான வில்லத்தனத்தை காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது. சத்யராஜ் உடன் நடித்த மக்கள் என் பக்கம்,, பூவிழி வாசலில், எங்க பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்கள் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார்.

‘ஒரு மனிதனின் கதை’ என்ற தொலைக்காட்சி தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.. ரகுவரனின் நடிப்புக்கு பெயர் போன படங்கள் அஞ்சலி, புரியாத புதிர், முதல்வன், சம்சாரம் அது மின்சாரம், மக்கள் என் பக்கம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா என பல படங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

கிட்டத்தட்ட தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார். ரகுவரன் இவருடன் இணைந்து நடிக்காத ஒரே நடிகர் கமலஹாசன் மட்டுமே. 96-ல் நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார். எட்டு வருடங்கள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை 2004 இல் விவாகரத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 2008இல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் அடுத்த நேர்காணல் ஒன்றில் ‘அனைத்து பெரிய நடிகர்களுடன் நடித்த ரகுவரன் ஏன் கமலுடன் மட்டும் நடிக்கவில்லை?’ என அவரது முதல் மனைவியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் ”’கமல் நடித்து வெளியான நாயகன் படத்தில் நாசர் நடித்த கதாபாத்திரத்தில் ரகுவரனின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது அவர் வேறு ஒரு படத்திற்காக முடி நீளமாக வளர்த்திருந்தார். அதனால் கமலுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் போனது’ என்று குறிப்பிட்டுள்ளார்.