‘குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவுங்க தானா?… இந்த ட்விஸ்ட்ட நாங்க எதிர்பாக்கலையே…

By Begam on ஆடி 23, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’.  இந்த ஷோவின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே ஆகும். கொரோனா லாக் டவுன்  சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் நிறைவடைந்து, 4வது சீசன் தற்பொழுது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது.

   

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றியாளராக வனிதா விஜயகுமாரும், இரண்டாவது சீசன் வெற்றியாளராக கனியும், மூன்றாவது சீசன் வெற்றியாளராக ஸ்ருதிகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்த சீசனில் சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து ஆகியோர் கோமாளிகளாக களமிறங்கினர்.

   

 

இவரை தொடர்ந்து இந்த சீசனில் குக்காக ‘வலிமை திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்த ராஜ் ஐயப்பாவும்,  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய ஷெரினும், ரஜினியுடன் முத்து திரைப்படத்தில் நடித்த நடிகை விசித்ராவும், நாய் சேகர் பட இயக்குனர் கிஷோர், சீரியல் நடிகரான விஜே விஷால் மற்றும் சிவாங்கி போன்றோர் களமிறங்கி கலக்கினர்.

தற்பொழுது  இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்று முடிந்துவிட்டதாகவும், இது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் என்றும் சிவாங்கி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

அதாவது இந்த சீசனின் டைட்டில் வின்னர் மைம் கோபி தான் என்று கூறப்படுகிறது. இரண்டாவது இடத்தை பிடித்தது ஸ்ருஷ்டி என்றும், மூன்றாவது இடத்தை பிடித்தது விசித்ரா என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இத்தகவல் உண்மையா என்பது நமக்கு தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.