பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானா?… இவரை நாங்க எதிர்பார்க்கலையே… வைரலாகும் தகவல் இதோ….

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது தற்பொழுது விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை போன்ற எந்த நிகழ்ச்சிக்கும் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருந்தது கிடையாது. 21 போட்டியாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

   

இவர்களில் யார் டைட்டிலை வெல்வார்கள், யார் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்தனர்.

அனைத்து போட்டியாளர்கள் உறவினர்களுமே போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தனர். கதிரவனுக்கு அவரது காதலி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ரட்சிதாவிற்கு அவரது கணவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இதை தொடர்ந்து தற்பொழுது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் அசீம், விக்ரமன், சிவின், கதிரவன், ஏடிகே, மணிகண்டன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் தற்பொழுதுவரை குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் மணிகண்டன்  தான் உள்ளது. இவருக்கு முந்தைய இடத்தை ஏடிகே பிடித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் விட்டு வெளியேறுவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.