சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. இவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை. இதைத்தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.
சமீபத்தில்மாரிமுத்துவுக்கு பதில் தற்போது வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரன் ரோலில் நடிக்கபோவதாக தகவல் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு நடிகர் பசுபதி , நடிகர் ராதா ரவி என பலரது பெயரும் அடிபட்டது. இந்நிலையில் நடிகர் வேல ராமமூர்த்தி கொடுத்திருக்கும் பேட்டியில் தனக்கு எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பது உண்மை தான் என கூறி இருந்தார்.
ஆனால் தான் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருவதாகவும், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க தற்போது பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது, இன்னும் உறுதியாகவில்லை என கூறியிருந்தார். தற்போது அவரையே இறுதி செய்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில தினங்களில் ஆதி குணசேகரனாக நாம் வேல ராமமூர்த்தியை எதிர்நீச்சல் சீரியலில் பார்க்க முடியுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…