#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் 61 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் எம்ஆர்எப் கார் பந்தய வீரரும் ஆவார். 1990 ஆம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியாதன் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அஜித் குமார்.
1995 ஆம் ஆண்டு ஆசை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்ற அஜித்குமார் 1996 ஆம் ஆண்டு காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் திருப்புமுனையை பெற்றார். அடுத்ததாக காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம் போன்ற அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றார் அஜித்குமார்.
2000 களின் பிற்பகுதியில் பல கமர்சியல் திரைப்படங்களில் கமிட் ஆகி ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவரானார் அஜித்குமார். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையால் உயர்ந்தவர் அஜித் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் ஆகும். விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி எழுதி இயக்கி அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா ஆகியோர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியாக தயாராக இருக்கிறது. அதேபோல் அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிறது. இந்நிலையில் இந்த இரு படத்திற்கான ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது.
அது என்னவென்றால் விடாமுயற்சி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதாம் வெளியாகலாம் என்று படக்குழு அறிவித்து இருந்தது. அதேபோல் குட் பேட் அக்லி திரைப்படத்தை 2025 பொங்கலுக்கு வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால் விடாமுயற்சி திரைப்படத்தை இன்னும் மகிழ் திருமேனி கம்பிலீடாக முடிக்கவில்லையாம். அதனால் விடாமுயற்சி ரிலீஸ் ஆவது தள்ளிப் போகலாம். பொங்கலுக்கு குட் பேட் அக்லி ரிலீசான பிறகு விடாமுயற்சி வெளிவர வாய்ப்பு இருக்கிறது. அதனால் விடாமுயற்சியை குட் பேட் அக்லி ஓவர் டேக் செய்து விடலாம் என்றும் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…