திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், விரைவில் அரசியலுக்குள் நுழைய ஆயத்தமாகி வருவதாகப் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அவரது நற்பணி இயக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் மகளான காந்திமதி இணையவுள்ளதாகக் கூறப்படும் செய்தி தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் தனுஷைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. முன்னதாக பாமகவில் பிளவு ஏற்பட்டபோது, அக்கட்சியின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டவர் காந்திமதி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாமகவில் தந்தை ராமதாஸும், மகன் அன்புமணி ராமதாஸும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், காந்திமதியின் இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் அவர் பாமகவிலிருந்து விலகி தனது அரசியல் திசையை முற்றிலும் மாற்றத் தொடங்கிவிட்டாரோ என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தனுஷின் ரசிகர் நற்பணி இயக்கம் மூலம் தனது சமூக மற்றும் அரசியல் இருப்பை பலப்படுத்த காந்திமதி திட்டமிடுகிறாரா அல்லது தனுஷின் புதிய அரசியல் பயணத்திற்கு இது ஒரு தொடக்கப்புள்ளியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
