தவெக-வில் இருந்து வந்த செம ஆஃபர்…. அதிமுகவில் இருந்து விலகும் Ex அமைச்சர் வளர்மதி?…. சலசலப்பை அடக்கிய அப்சரா ரெட்டியின் ட்வீட்…!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருநங்கையும் அரசியல் பிரமுகருமான அப்சரா ரெட்டியின் ‘X’ சமூக ஊடகப் பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தவெக தரப்பிலிருந்து வளர்மதிக்கு மிகச் சிறந்த மற்றும் கவரக்கூடிய அரசியல் வாய்ப்புகள் தேடி வந்தபோதிலும், அவர் தனது தாய் கட்சியான அதிமுகவிலேயே நீடிக்க உறுதியுடன் இருப்பதாக அப்சரா தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வளர்மதியின் இந்த அரசியல் அறிவும், கட்சி மாறாத முதிர்ச்சியுமே அவரது மிகப்பெரிய பலமாக விளங்குவதாகவும், இக்கட்டான சூழலிலும் கொள்கை மாறாமல் இருக்கும் இந்த நற்பண்பை தற்போதைய அதிமுகவினர் அனைவரும் அவரிடமிருந்து கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்சரா ரெட்டி அந்தப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.