“அப்போ அது உண்மைதானா?”… அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு…. தமிழக அரசியலை உலுக்கும் டெல்லி விசிட்…!

By Nanthini on ஆனி 1, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில், முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன; அங்கு அவர் நிதின் நபின் உள்ளிட்ட பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாகவே அண்ணாமலை பா.ஜ.கவிலிருந்து விலகி, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போகிறார் என்ற வதந்திகளும் பேச்சுக்களும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்து வருகின்றன.

வழக்கமாகத் தன் மீதான விமர்சனங்களுக்கும் செய்திகளுக்கும் உடனுக்குடன் பதிலளிக்கும் அண்ணாமலை, இந்த விவகாரம் குறித்து தற்போது வரை எந்தவொரு மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இதனால், அவர் பா.ஜ.கவிலிருந்து விலகும் முடிவில் இருப்பது உண்மைதான் என்ற சந்தேகம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளதுடன், இன்றைய அவரது டெல்லி பயணம் இந்த ஊகங்களுக்கு ஒரு தெளிவான விடையைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.