“உலகமே அதிருது”… ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்… அமெரிக்காவுக்கு ‘நோ’ சொன்ன நட்பு நாடுகள்… தனித்து விடப்பட்ட டிரம்ப்… ஈரானின் அடுத்த மூவ் என்ன?…!!!

By Rajeshwari on பங்குனி 17, 2026

Spread the love

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஐந்து முக்கிய தவறுகள் அமெரிக்காவை ஒரு நீண்டகாலப் போருக்குள் தள்ளியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஈரானில் உடனடி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று டிரம்ப் தவறாகக் கணித்தது முதல் பின்னடைவு தொடங்கியது. சி.ஐ.ஏ போன்ற உளவு அமைப்புகள் எச்சரித்த போதிலும், ஈரானிய மக்களின் தேசபக்தியையும் அந்நாட்டின் இராணுவ வலிமையையும் அவர் குறைத்து மதிப்பிட்டார்.

மேலும், ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்ட பின்னரும் அந்நாட்டின் ஆக்ரோஷம் குறையாததுடன், ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகமும் பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது டிரம்பின் ராஜதந்திரத் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறைந்து வருவதற்கு டிரம்பின் முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளும் ஒரு முக்கிய காரணமாகும். குறிப்பாக, சவூதி அரேபியா, கத்தார் போன்ற நட்பு நாடுகளும், நேட்டோ அமைப்பும் இந்தப் போரில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன.

   

இந்நிலையில் திட்டமிடப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாகத் தாக்குதல் நடத்தியது மற்றும் சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளைத் தள்ளிவைத்தது போன்ற டிரம்பின் பிடிவாதமான நடவடிக்கைகள் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தியுள்ளன. அரபு நாடுகளின் துணையின்றி ஈரான் போன்ற ஒரு வலிமையான நாட்டை எதிர்கொள்வது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளதோடு, இது டிரம்பின் அரசியல் எதிர்காலத்தையும் உலக அரங்கில் அமெரிக்காவின் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.